ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு - வழமைக்கு வரும் மின்வெட்டு
நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர்.
மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது பணிப்புரை விடுத்தார்.
தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல், மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றையதினம் ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
