சிறுமி ஹிஷாலினியின் பிரேத பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் சரீரம் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளது.
குறித்த சரீரத்தை தனிமைப்படுத்தல் நெறிமுறைகளுக்கு அமைவாக தோண்டி எடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், இன்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று விடயங்களை தெளிவூட்டிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி லுஷிகா குமாரி ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் நுவரெலியா நீதிவானின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரியப்படுத்தப்பட்டது.
விடயங்களை ஆராய்ந்த நீதிவான் விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் நாளை காலை 8.30 அளவில் ஹிசாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் காவல்துறைப் பாதுகாப்புடன் சரீரத்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அவர் கட்டளை பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri