நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பசில் – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான வழக்கு இன்று(18) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை, சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசுடைமையாக்க உத்தரவு
வழக்கில் பசில் ராஜபக்ச மூன்றாவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவரது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
எனினும், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காமல் பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மாத்தறை நீதவான் சதுர திசாநாயக்க, பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைத் தொகையை அரசுடைமையாக்க உத்தரவிட்டார். மேலும், அவருக்காக சரீரப் பிணையில் கையெழுத்திட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்! தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை
you may like this..
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam