உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Sri Lanka Government Of Sri Lanka Supreme Court of Sri Lanka Easter Attack Sri Lanka
By Independent Writer Apr 22, 2022 05:44 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேரை இன்று(22) பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனையவர்களைத் தொடர்ந்து மே 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 அன்று உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காக சென்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் மற்றும் சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நான்கு வெவ்வேறு இலக்கம் கொண்ட வழக்கு தாக்கல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றிலிருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று(22) மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலையில் அழைத்துவரப்பட்ட 9 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இதில் 5 பேரை தலா ஒருவருக்கு 50 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையும்,மாதாந்தம் 2 ம் மற்றும் 3 ம் கிழமைகளில் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் பிற்பகல் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்து இடுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தனர்.

அதேவேளை ஏனைய 55 பேரையும் தொடர்ந்து மே மாதம் 4 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காணொளி மூலம் நீதவான் உத்தரவிட்டார். 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US