நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்று (07.11.2023) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
உத்தேச திருத்தங்கள்
இந்நிலையில் சில சரத்துகள் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்மானத்தின் உத்தேச திருத்தங்களுக்கு உட்பட்டு, செயற் குழுவின் போது திருத்தப்பட்டால், இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், குறித்த விடயங்களுக்கு உட்பட்டு சட்டமூலம் அல்லது அதன் விதிகள் எதுவும் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam
