இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக புறக்கோட்டையில் மோசடி - பின்னணியில் பிரபல நடிகர்
இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நீண்ட நாட்களாக மோசடி செய்து வந்த கும்பலை புறக்கோட்டையில் சுற்றிவளைப்பதற்கு வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கும்பலின் தலைவன் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் என தெரியவந்துள்ளது.
இத்தாலியில் தொழில் பெற்று தருவதாக 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடியை செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் மூளையாக விளங்கும் நபர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர் என காட்டி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி கும்பல்
அவரும் அவரது குழுவும் மற்றொரு பண மோசடியில் ஈடுபட்டபோது, வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அவர்களை சிக்க வைத்து கைது செய்தனர்.
இந்த மோசடி கும்பலிடம் சிக்கியவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க வந்த போதே இந்த கும்பல் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், இத்தாலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலி விசாக்கள், போலி விமான டிக்கெட்டுகள் மற்றும் போலி ஆவணங்கள் அடங்கிய பல கையடக்க தொலைபேசியையும் விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.