தனியார் விமான நிறுவன பிரதானிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தனியார் விமான நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கட்டுநாயக்க - கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தில் இலகுரக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
தனியார் விமான நிலையத்தின் பிரதான அதிகாரிகள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இலகு ரக விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாக அண்மையில் தரையிறக்கப்பட்டன.
கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தில் வயல் வெளியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால், அதில் பயணித்த இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு வெளிநாட்டவர்கள் காயமடைந்தனர்.
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமை காரணமாக இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் கீழ் மேற்படி சந்தேக நபர்களை குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam