அனுமதிக்கப்படாத நேரத்தில் கடற்தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் அனுமதிப்பத்திரங்கள் இன்றியும் அனுமதிக்கப்படாத நேரத்தில் சிலிண்டர் பாவித்து தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணமாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச கடற்பரப்புக்குள் அனுமதிப் பத்திரங்கள் இன்றியும் படகுகள் பதிவு செய்யப்படாமல் மற்றும் அனுமதிக்கப்படாத நேரத்தில் சிலிண்டர் பாவித்து நீரில் மூழ்கி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்களில் கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களை நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில்
நீதவான் பீ.ஆர் ஸ்மாத் ஜெமில் தலைமையில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா பத்தாயிரம் ரூபா வீதம்
தண்டப்பணமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
