'இனி அகதிகளுக்கு இதெல்லாம் கிடையாது' - பிரித்தானிய உள்துறை அலுவலகம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரித்தானியாவில் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு இனி பற்பசை, சவர்க்காரம் முதலான பொருட்கள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படாது என பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணி புரிந்தவர் Faiz Mohammad Seddeqi (30) எனும் நபர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்டு பிரித்தானியாவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Seddeqiயின் குடும்பம் தங்கவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் ஆறு மாதங்களாக அந்த ஹொட்டலில் தங்கியிருந்த நிலையில், Seddeqiக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,பெப்ரவரி 11ஆம் திகதியிலிருந்து, உங்களுக்கு சோப்பு, பற்பசை மற்றும் மருந்துகள் முதலான பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பாயிண்ட்மெண்ட்களுக்காக பயணிக்கும்போது டெக்ஸி கட்டணம் போன்ற செலவுகளையும் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது 25,000 புகலிடக்கோரிக்கையாளர்கள், 12,000 ஆப்கன் அகதிகள் என மொத்தம் 37,000 பேர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக நாளொன்றிற்கு பிரித்தானிய அரசு 4.7 மில்லியன் பவுண்டுகள் செலவிடுவதாக உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
