எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
எரிபொருள் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடைவதாகவும், டொலர் பற்றாக்குறை பிரச்சினை இருப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டுமெனவும் அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.
எனினும் இன்று, நாளை எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனமும், எரிசக்தி அமைச்சரும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கோரிக்கை - இலங்கையில் எரிபொருட்களின் விலைகளும் உயர்த்தப்படுமா?
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam