பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
ஏறாவூர்-சந்திவெளி, கரடியனாறு பொலிஸ் பிரிவுகளில் திருட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைய திருடர்களை விடுவித்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவானுமாகிய அன்வர் சதாக் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவை அவர் நேற்று (15.11.2023) பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றில் ஏறாவூர், சந்திவெளி, கரடியனாறு பொலிஸ் நிலையங்களினால் திருட்டுசம்பங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருடைய வழக்கு விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய Al-Shifa வைத்தியசாலையும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகின்ற ஹமாசின் நிலக்கீழ் தளங்களும் (Video)
குற்றவியல் சட்டம்
இதன் போது குறித்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் எதிராக சரியான முறையில் பொலிஸார் வழக்கு தொடராத காரணத்தால் அவர்கள் குற்றவாளிகள் என நிருபிக்கப்படதால் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளனர்.
குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் குறித்த நபர்கள் பல திருட்டுச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தெரிந்தும் அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சரியான பிரிவுகளில் வழக்கு தொடரவில்லை எனவே இதன் காரணமாக பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் வெளியில் சென்று மீண்டும் குற்றவியலில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு காரணம் பொலிஸார் எனவே பொலிஸ் மா அதிபர் குறித்த பொலிஸ் நிலையங்களில் குற்றத்தடுப்பு மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
