ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட இரண்டு சிறுவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் ரஸாக் முன்னிலையில் நேற்று(30) குறித்த சந்தேகநபர்கள் 31 பேரையும் முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையுடன் விடுதலை
கிழக்கு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட 31 பேரில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரும் கர்ப்பிணி தாய் ஒருவரும் அவருடைய இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேலையில், திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் ,எச்சரிக்கை செய்து கர்ப்பிணிப் பெண்ணையும் அவருடைய இரண்டு சிறார்களையும் இரண்டு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றவர்கள் கைது
அத்துடன் வாழைச்சேனை, கல்முனை அக்கரைப்பற்று போன்ற பகுதிகளை சேர்ந்த ஐந்து பேர் கடற் படையினரால் கிழக்கு கடற் பரப்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த ஐவரும் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றவர்கள் எனவும் தங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டதாக கூறி தங்களை கைது செய்ததாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் திருகோணமலை துறைமுக பொலிஸார் சட்டவிரோத பயணம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இருப்பினும் கைது செய்யப்பட்ட குறித்து சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும்
13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.