10 வருடங்களுக்கு முன்னர் சிறுமியொருவரை தகாத முறைக்கு உட்படுத்தியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பத்து வருடங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வாடகைக்கார் சாரதி ஒருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
35 வயதான இந்த சாரதி10 வருடங்களுக்கு முன்னர் தனது இல்லத்திற்கு அருகிலுள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடுமையான சிறைத்தண்டனை
இந்தநிலையில் நேற்று(11.06.2024) தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபென்டீகே குற்றவாளிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இழப்பீடு வழங்கப்படாவிட்டால் அது கூடுதல் அபராதமாக மீட்கப்படும் என்றும், குற்றவாளி அந்த அபராதத்தையும் செலுத்தத் தவறினால், அவருக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |