எங்களை பழிவாங்கியவர்கள் பலிக்கடாவாகும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது : நாமல் ஆதங்கம்
நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களை அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக்கியவர்கள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகின்றனர்.அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டை மீட்ட தலைவர்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். நல்லாட்சி அரசாங்கத்தில் அன்று எங்களை சிறையில் அடைத்தனர்.
அப்போது களுத்துறையில் உள்ள ஒரு அரசியல்வாதி ஒருவர் அதற்கெதிராக குரல் கொடுத்தார். எங்களுக்கு நடந்த அநீதி அக்கிரமங்கள் இன்னொருவருக்கு நடக்கும்போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தெற்கிற்கு எதிராக போராடுவோம்.
எங்களுக்கு அது கெடுதலென்றால், அவர்களுக்கு எவ்வாறு நன்மையாகும்?
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவர் என வெளிநாட்டினர் குறித்த கைதை விமர்சிக்கையில் நம்மவர்களுக்கு தெரியவில்லை.
எதிர்க்கட்சி வரும் 26 ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் போராட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு தெரிவிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




