அவதூறை ஏற்படுத்தும் வகையிலான செய்தி குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவு
பொய் மற்றும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர (P.B.Jayasundara) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 290 மில்லியன் ரூபாவை வைப்பிலிடுமாறு தான் அழுத்தம் கொடுத்ததாக பத்திரிகையில் வெளியான செய்தியை ஜயசுந்தர நிராகரித்துள்ளார்.
குறித்த பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்பதுடன் அவதூறை ஏற்படுத்தும் செய்தி எனவும் அவர் கூறியுள்ளார்.
பத்திரிகை செய்தி சம்பந்தமான அனைத்து தரப்பினரையும் உடனடியாக அழைத்து உரிய விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவுக்கு (C.D.Vikramaratne) உத்தரவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
