ராஜிதவுக்கு எதிரான வெள்ளை வான் வழக்கு விசாரணைக்கு உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senarathna) உட்பட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான வெள்ளை வான் வழக்கை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வான்களில் ஆட்களை கடத்திச் சென்று கொலை செய்து, முதலைகள் இருக்கும் குளத்தில் போட்டதாக மாறு வேடம் அணிந்த நபர்களை கொண்டு கூற வைத்ததாக தெரிவித்து, ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கின் சாட்சியாளர்கள் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்பாணை அனுப்பி வைக்குமாறும் நீதிபதி, நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள கணனி சாட்சியங்கள் சம்பந்தமான அடிப்படை எதிர்ப்பை முன்வைக்க உள்ளதாக சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பை முன்வைப்பதற்காக இந்த வழக்கு அடுத்த மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
