ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் வழக்கில் சர்வதேச ஊடகத்திற்கு எதிராக உத்தரவு
முன்னிலை ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீனின் ஒப்பந்தத்தை முன்கூட்டியே நிறுத்தியதற்காக சர்வதேச ஊடகமொன்றிற்கு எதிராக இலங்கை தொழில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கிற்கான தீர்ப்பானது நேற்றைய தினம் (27.04.2024) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சர்வதேச ஊடகத்தின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையானது, நியாயமற்றது என தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வெளியான குரல் பதிவு
இதற்கமைய, அந்த ஊடகவியலாளருக்கு குறித்த சர்வதேச ஊடகம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஊடகவியலாளருக்கும் அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் இடையிலான குரல் பதிவொன்று வெளியான நிலையிலேயே ஊடகவியலாளர் அமீனின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |