அடக்குமுறையை அடக்குமுறையால் அடக்க வேண்டும்-பிரசன்ன ரணதுங்க
அடக்குமுறையை அடக்குமுறையால் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அதற்காக தயாராக இருப்பதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் 2 ஆம் திகதி கொழும்பு நகரை முற்றுகையிட தயாராகி வருவது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அடக்குமுறையில் ஈடுபட்டால் அதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாட்டின் எதிர்காலத்திற்காக நாட்டை ஒழுங்குப்படுத்த வேண்டிய நேரமிது. மக்களை தாக்கி, கொலை செய்து, அரசாங்கத்தை கவிழக்க இடமளிக்க முடியாது.
அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு செவி கொடுக்க அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதனை விடுத்து கொலை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அரசாங்கம் என்ற வகையில் இரும்பு கரம் கொண்டு செயற்பட வேண்டும்.
அடக்க வேண்டும் என்று கூறவில்லை. அடக்குமுறையில் ஈடுபட வந்தால், அதனை அடக்குமறையின் ஊடாக அடக்க வேண்டும் இந்த நாட்டில் எவரும் அங்கீகரிக்காத வீடுகளை தீ வைப்பவர்கள்,கொலை செய்பவர்கள்,போதைப் பொருளை பயன்படுத்தும் அணி ஒன்று இருக்கின்றது.
நாளைய தினம் தேர்தல் நடத்தினாலும் பொதுஜன பெரமுன வெற்றி பெறும்

அவர்களின் தேவை நாட்டில் நிறைவேற்றப்படுமாயின் அது நாட்டுக்கு நல்லதாக இருக்காது.
இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் பலமான அரசியல் கட்சி எனவும் நாளைய தினம் தேர்தலை நடத்தினாலும் கட்சி வலுவுடன் வெற்றி பெற முடியும்.
எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.