அநுரவுக்கு விரித்த சதி வலையில் சிக்கிய மகிந்த தரப்பு! தலைகீழாக மாறிய அரசியல் நாடகம்
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமகால அரசாங்கம் வலுவான நிலையில் செயற்பட்டு வருகிறது.
எனினும் இது தமது அரசியல் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்க்கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.
இதன் காரணமாக சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பௌத்த மதத்திற்கு எதிரானவர் என்ற கோஷத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சியினர் ஏமாற்றம்
தமது சதி நடவடிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் மகாநாயக்க தேரர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளவும் எதிர்தரப்பினர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அந்த முயற்சி பாரிய தோல்வி அடைந்துள்ள நிலையில், மகிந்த தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அவர்கள் திட்டமிட்டதற்கு எதிராக மகா சங்கத்தினருக்கும் சமகால அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக, கிராமங்களில் உள்ள விகாராதிபதித் தேரர்களும் அரசாங்கத்தின் சார்பான கிராமப் பிரதிநிதிகளும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு பாராட்டு
இவ்வாறான கலந்துரையாடல்களின் மூலம் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த சில பௌத்த பிக்குகளும் சரியான தகவல்களின் அடிப்படையில், அநுர அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி தெரிவித்துள்ளார்.

தன்னுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள், உண்மை நிலையை புரிந்து கொண்ட பின்னர், எதிர்க்கட்சிகளை கடுமையாக திட்டித் தீர்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட பௌத்த எதிர்ப்பு வாதம், தற்போது அரசாங்கத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பௌத்த தேரர்கள் மட்டுமல்லாமல், வர்த்தகர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் போன்ற தொழில்வல்லுநர்கள் மற்றும் கற்றறிந்த சமூகத்தை சேர்ந்த பலரும் நாடே ஒன்றாக திட்டத்தை விரும்புவதோடு, பெருமளவில் பாராட்டுவதாகவும், இந்த சந்திப்புகளின் போது அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan