வெளிநாடு செல்ல வேண்டாம் ...! எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை
ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்குமாறு அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர்.
எதிர்வரும் சில வாரங்களுக்கு நாட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்றிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்றத் தன்மை காரணமாக அடிக்கடி சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்காக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றையும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையையும் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தங்களது அலைபேசிகளை எந்த நேரத்திலும் நிராகரிக்க (ஸ்விட்ச் ஓப்) வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri
விஜய் ரசிகர்களை பற்றி சிவகார்த்திகேயன் பதில்! சுதா கொங்கரா பேச்சு சர்ச்சையான பின் விளக்கம் Cineulagam
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri