இன்னும் ஒரு மாதத்தில் பாரிய நெருக்கடி - எதிர்க்கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் செப்டெம்பர் மாதமாகும் போது இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும், நாட்டில் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் போன்றதொரு நிலைமை கூடத் தோற்றம் பெறலாம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாடலை பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது –முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
டொலரை பாதுகாக்க முடியாத அரசு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டொலரைக்கூட முறையாக நிர்வாகிக்க முடியாத ஓர் ஆட்சியே தற்போதைய திசைகாட்டி அரசாகும். இதனால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆகும்போது இந்த நாடு பாரியதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த நெருக்கடியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கட்டுப்படுத்தவோ அல்லது நிர்வகிக்கவோ முடியாமல் போகும்.

நான் இன்று ஒரு முக்கிய இரகசியத்தைக் குறிப்பிடுகின்றேன். அதாவது 'மூன்றெழுத்து' தொடர்பில் அடுத்த 4 மாதங்களுக்குள் இந்த அரசு தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கவுள்ளது.
'மூன்றெழுத்து' என்றால் என்னவென்று என்னிடம் கேட்க வேண்டாம். அது எமது கட்சியான எஸ்.பி.ஜே. (ஐக்கிய மக்கள் சக்தி) அல்லது யு.என்.பி. (ஐக்கிய தேசியக் கட்சி) கிடையாது.
அந்த 'மூன்றெழுத்து'டன் இந்த அரசு தீர்க்கமான முடிவுக்குச் சென்ற பிறகு, நாட்டில் “கோட்டாபய - 02” போன்றதொரு மக்கள் எழுச்சி நிலைமை உருவாகும். நாம் இதற்கு முன்னர் எச்சரித்துக் கூறிய அனைத்தும் நாட்டில் நடந்துள்ளன என்றார்.
தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... புகைப்படங்கள் இதோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri