ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு: குவிக்கப்பட்ட பொலிஸார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு இன்று (26.05.2024) பிற்பகல் வருகை தந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தை சேர்ந்த தாய்மார் சிலர் ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்பு கொடி காட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அங்கு மேலதிக பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு குறித்த தாய்மாரை வீதிக்கு வரவிடாது தடுக்கப்பட்டிருந்தனர்.
பரப்பான நிலமை
இதன் பின் மாவட்ட செயலக வாயிலுக்கு செல்ல முற்பட்ட தாய்மாரை பொலிஸார் வழிமறித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இதன்காரணமாக, மாவட்ட செயலகம் முன்பாக ஜனாதிபதியின் கூட்டம் முடியும் வரை பரப்பான நிலமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri