சஜித்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ரிஷாத் : வெளியான எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(Sajith Premadasa) ஆதரவளிக்க ரிஷாத் பதியுதீன் எடுத்த தீர்மானத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் அப்துல்லா மஹ்ரூப் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், தமது 95 வீத ஆதரவாளர்கள், ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று கூறுவதாகவும், மொஹமட் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உயர்பீடம்
இது தொடர்பில் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்திய போதிலும் கட்சியின் உயர்பீடம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவர் ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் பொருளாதார அராஜக நிலைக்கு தள்ளப்படும் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் ஏற்கனவே ஜனாதிபதிக்கு ஆதரவாக ஒன்றிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
