பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர்: மோடி பகிரங்கம்
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் அதனை எதிர்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேஸில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
“பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் வாக்குவங்கி அரசியலுக்காக அதை எதிர்க்கட்சியினர் எதிர்க்கின்றனர். இருப்பினும் வாக்கு வங்கி அரசியலுக்கான வழியை பின்பற்றப்போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது.
ஒரு நாடு ஒரு சட்டம்
ஒரே வீட்டில் உள்ள ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு மற்றொரு சட்டமும் இருந்தால் வீடு எவ்வாறு இயங்க முடியும்? இதேபோல், ஒரு நாடு எப்படி இரண்டு சட்டங்களில் இயங்கும்?
இந்தியாவில் தற்போது மத அடிப்படையில் பல்வேறு சிவில் சட்டங்கள் உள்ளன. எனினும் பொதுசிவில் சட்டம் என்பது, மதரீதியில் அல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டமாகும்.
மேலும் ஊழல்வாதிகள் அனைவரும் பிகார் மாநிலத்தில் கைகோர்த்துள்ளனர். ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் யாரும் சட்டத்திலிருந்து விலக முடியாது” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியினால் வழங்கப்பட்ட பெரிய வாக்குறுதிகளில் இதுவாகும் ஒன்றாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |