அவசரமாக கூடிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள்!
எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டது.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விவாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து சட்டமூலம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடும் நோக்கில் எதிர்க்கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்று கூடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளி பின்வருமாறு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |