அநுர அரசுக்குள் புலனாய்வு செய்யும் எதிர்க்கட்சிகள் : சிக்குவார்களா முக்கிய அரசியல்வாதிகள்
மிக நீண்ட புத்தாண்டு விடுமுறையில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் யாராவது வெளிநாடு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில், தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் மிக நீண்ட விடுமுறைகாலம் அனைவருக்கும் கிடைக்கப்பெறும்.
வெளிநாடு சென்றது யார்..
இந்தநிலையில், கடந்த காலங்களில், கடந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று புத்தாண்டினை கொண்டாடிவிட்டு நாட்டுக்குத் திரும்புவர்.
சிலர் புத்தாண்டுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கு செல்வதும், மேலும் சிலர் புத்தாண்டு சமயம் எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாய கடமைகளை முடித்து விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனினும், இது போன்ற வெளிநாட்டு கொண்டாட்டங்களில் தமது அரசாங்கத்தினர் ஒருபோதும் ஈடுபட போவதில்லை என உறுதியளித்ததுடன், இப்படிச் செல்லும் முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் காலங்களில் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டில் வழக்கம் போலவே நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள், அநுர தரப்பின் அமைச்சர்கள் யாராவது வெளிநாடு சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இதுவரை அதுபோல எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் இதனால் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
