அரசின் புதிய வரிகொள்கையை முற்றாக நிராகரிக்கும் எதிர்க்கட்சி
அரசாங்கத்தின் புதிய வரிகொள்கைக்கு எதிராக திருத்தங்களை முன்வைக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் வரி கொள்கை
அரசாங்கம் வரி செலுத்தாத நபர்களை சிறையில் அடைக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து வரி திரட்டும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு அரசாங்கம் வரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ஜனநாயக விரோத செயற்பாடாகும் என எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதனடிப்படையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மீதான இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் இது தொடர்பில் சில திருத்தங்களை முன்வைக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan