இந்திய பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த எதிர்க்கட்சிகளின் ஒப்புதல்
இந்திய காஸ்மீரில் மேற்கொள்ளப்பட்ட, தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசாங்கம், மேற்கொள்கிற பயங்கரவாதத்தை ஒடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், இந்திய எதிர்க்கட்சிகள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
புதுடில்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜம்மு காஸ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயற்படுவதாக கூறப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசாங்கம், அடுத்தடுத்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுடில்லியில் இன்று மாலை அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை மத்திய அரசாங்கம் கூட்டியிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர்கள் அமித் சா மற்றும் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தனர்.
இந்தநிலையில், குறித்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பஹல்காம் தாக்குதலை அனைத்து கட்சித் தலைவர்களும் வன்மையாக கண்டித்தனர்.

இலக்கு வைக்கப்பட்ட மகிந்தவின் முக்கிய சகா டேன் பிரியசாத்-அடுத்தது யார்..! கதி கலங்கும் பின்னணி- பீதியில் நாமல்
ஜம்மு காஸ்மீர்
அத்துடன், ஜம்மு காஸ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், செய்தியாளர்களிடம் கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். அத்துடன், மத்திய அரசாங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும், அவற்றுக்கு அனைத்து கட்சிகளும் தமது ஆதரவை வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பயங்கரவாதத்தை. ஒடுக்கும் மத்திய அரசாங்கத்தின்; அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று திராவிட முன்னேற்றக்கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
