எதிர்க்கட்சிகள் வாக்காளர்களுக்கு போதைப் பொருள் வழங்கியதாக குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் வாக்குகளை பெற்றுக்கொள்ள போதைப் பொருள் வழங்கியதாக ஆளும் தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான சதுரங்க அபேசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மிகவும் வலுவான பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் வேண்டியவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், மதுபானம் தேவையானோருக்கு மதுபானமும், போதைப் பொருள் தேவையானோருக்கு போதைப் பொருளும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய தொகுதிகளில் இது எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியாது என்ற போதிலும் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் கோட்டே தொகுதியில் இந்த விடயம் நடைபெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பொருட்கள், மதுபானம், போதைப் பொருள் என பலவற்றை வழங்கி செய்த பிரசாரத்திற்கு தம்மால் ஈடுகொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் இல்லாத அளவிற்கு இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்ததாக இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.