பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து நீதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Guardian Law and Society Trust Sri Lanka Sri Lanka Government Law and Order
By Rusath Feb 21, 2026 12:52 PM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதோடு தற்போது வரைபாக இருக்கின்ற பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டத்தினை அரும்பிலேயே கைவிடுங்கள் என்று கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபு குறித்து நீதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இக்கோரிக்கையை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் முன்வைத்துள்ளது.

குறித்த ஒன்றியம், (21.02.2026) அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பிட்டுள்ளதாவது, ஒரு நாட்டில் ஊடகத்துறையானது சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்கக்கூடிய, செயற்படக்கூடிய நிலைமை காணப்படுவது அவசியமாகும்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர விசாரணை

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! சந்தேகநபர்களை கைது செய்ய தீவிர விசாரணை

அரசாங்கத்தின் செயற்பாடுகள்

ஆனால், பயங்கரவாத்திலிருந்து அரசைப்பாதுகாக்கும் சட்ட வரைபில் காணப்படுகின்ற மிகவும் கடுமையான அடக்குமுறை மற்றும் ஜனநாயக எதிர்ப்பு ஏற்பாடுகள் காரணமாக அதனை உடனடியாக அகற்றிக் கொள்வதே சிறப்பான நடைமுறையாக காணப்படும் என்பது எமது அமைப்பின் வேண்டுகோளாகும்.

இச் சட்டவரைபானது ‘பயங்கரவாதம்’ என்பதற்கான தெளிவான வரைவிலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து நீதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Opposition New Terrorism Law To Protect Free Media

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தல், அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது ஆட்சியாளர்கள் விரும்பத்தகாத, விருப்பமற்ற கருத்துக்களை தெரிவிப்பதுகூட, ‘அரசுக்கு எதிரான நடவடிக்கை என வியாக்கியானம் செய்வதற்கேதுவானதாக விளக்கமளிக்கப்பட்டிருப்பத் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இரகசியத் தகவல்கள் மற்றும் சிவில் நடவடிக்கைகள் குறித்த சரத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நடைபெறுகின்ற அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வேளைகளில் புகைப்படம் எடுத்தல், பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடு தொடர்பில் அறிக்கையிடுதல் போன்றவைகள்கூட குற்றமாக கணிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.

தகவல்களை அறிக்கையிடுதல் தொடர்பான சரத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தொழிற்றுறையாளர்களினதும் மற்றும் சமயத் தலைவர்களினதும் தொழிற்றுறை இரகசியத் தன்மை மற்றும் ஒழுக்கவியல் விடயத்தில் மிகப் பாரதூரமான மீறல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்கள் இலக்கு 

அதே போன்று, இணையதள மற்றும் டிஜிட்டல் வெளியில் சட்டத்தினூடாக வழங்கப்படுகின்ற அதிகாரத்தின் மூலம் நபர்களின் தொடர்பாடல் உரிமை மறுக்கப்படுவதற்கான வாய்ப்பு, ஆயுதந் தாங்கிய இராணுவத்தினர், கரையோரப் பாதுகாவலர்களுக்கு கைது செய்வதற்கு மற்றும் தேடுகையிடுவதற்காக அதிகாரம் அடக்குமுறை ஆளுகைக்கு வழியேற்படுத்தும்.

“பயங்கரவாதத்திற்கு உடந்தையளிக்கின்றார்” என்ற அடையாளப்படுத்தலில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுதல் நடைபெறலாம் எந்தவொரு விமர்சன ரீதியான அறிக்கையிடலையும் சட்டத்தின் வலையில் சிக்க வைக்கும் இயலுமை அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற காரணத்தினால் ஊடக சுதந்திரம் செயலிழக்கச் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து நீதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Opposition New Terrorism Law To Protect Free Media

இதற்கு  கடந்த காலங்களில் நடைபெற்ற பெருமளவான உதாரணங்கள் இருந்தாலும், அண்மையில் நகைச்சுவைக் கலைஞரான நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமையை அண்மைய உதாரணமாக காண்பிக்கமுடியும்.

இவ்வாறு சிவில் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக பெறுமதிகள் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய விசேட அடக்குமுறையான சட்டங்களுக்கு பதிலாக, நாட்டில் நடைமுறையிலுள்ள சாதாரண குற்றவியல் சட்டங்களை (அவசியமெனில், சர்வதேச மனித உரிமைச் சட்டகங்களை மீறாத வகையில்) இற்றைப்படுத்தி முன்னேற்றி சட்டத்தின் ஆளுமையை உறுதிப்படுத்தி பிரஜைகளின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களது பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிகோலுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம்! இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம்! இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

பயங்கரவாத தடை சட்டம் 

அத்தோடு, தேசிய பாதுகாப்பு என்பது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக பெறுமதிகளை கொன்றொழிப்பதற்காக பயன்படுத்தும், மனித உரிமைகளை அடக்கி ஒடுக்குகின்ற, பிரஜைகளின் குரலை முடக்குகின்ற பயங்கரவாத்த தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதோடு தற்போது வரைபாக இருக்கின்ற பயங்கரவாத த்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டத்தினை அரும்பிலேயே கைவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இதுவரையில் விசாரணைகள் இன்றி, சிறைச்சாலைகளிலேயே தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர், இவ்வாறு கடந்த காலங்களிலும் வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளிலும் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து நீதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | Opposition New Terrorism Law To Protect Free Media

இவ்வாறாக பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையில் உள்ள போதும் அதற்கு மேலாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டு வருவதானது மக்களையும், குறிப்பாக ஊடகவியலாளர்களையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் மென்மேலும் அடக்குமுறைக்குள் தள்ளும் என்பதில் எது வித ஐயமில்லை.

அரசாங்கம் புதிதாகக் கொண்டு வர முயற்சிக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை உடனடியாக கைவிடுமாறு எமது ஊடக அமைப்பு வேண்டுகோள் விடுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு: பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு: பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US