தேசிய மக்கள் சக்தி பொய்யுரைக்கும் கட்சி கிடையாது
தேசிய மக்கள் சக்தி பொய்யுரைக்கும் கட்சி கிடையாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
செய்யக் கூடிய விடயங்களை மட்டுமே தமது கட்சி கூறும் எனவும், வாக்குறுதி அளிக்கப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் அரசியலில் பொய்யுரைக்கும் வரலாறு நீண்ட காலமாக தொடர்ந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் கலகங்கள் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் பொய்யுரைத்தது யார் என்பது மக்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் பௌத்த மதம் அழிந்து விடும் என சிலர் குற்றம் சுமத்தியதாகவும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகள் கூறிய அனைத்தும் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.