ஜோதிடரைப் பார்க்க இந்தியாவுக்கு படையெடுக்கும் இலங்கை அரசியல்வாதிகள்
எதிர்வரும் காலங்களில் அரசியல் களத்தில் தங்களுக்குரிய இராஜயோகம் பற்றி தெரிந்து கொள்வதற்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு சென்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சித் தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள், சமீபத்திய நாட்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஜோதிடர்கள் குழுவை இரகசியமாகச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய ஜோதிடர்கள் சந்திப்பு
அவர்களில் பெரும்பாலானோர் இந்திய ஜோதிடர்களை சந்தித்ததாக தெரியவருகிறது. இராஜயோகம் இருக்கிறதா என்று பார்க்க, எதிர்க்கட்சியின் முன்னணித் தலைவர் ஒருவர் கடந்த வாரம் இந்தியா சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் எதிர்காலத்தில் நடைபெற உள்ளதாலும், பல அரசியல் கட்சி கூட்டணிகள் உருவாக்கப்படவுள்ளதாலும், அதற்காக சில தலைவர்கள் முதற்கட்ட நடவடிக்கையாக ஜாதகங்களைச் சரிபார்த்துள்ளதாக அறியப்படுகிறது.
வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கான அடிப்படை நடவடிக்கைகளை பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan