கோமாளியாக மாறிய சஜித் - மிஹிந்தலை விஹாராதிபதி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோமாளியாக மாறியுள்ளார் என மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி வலாவாஹெங்குனவெவே தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் நகைச்சுவையூட்டும் வகையில் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஜனாதிபதிகள் அழைத்த போது அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளாது இன்று வீதியில் இறங்கி மக்களை அணி திரட்டுவது நகைப்பிற்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் இயல்பு வாழ்க்கைகு இடையூறு
இன்று வீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சுற்றுலா கைத்தொழிலுக்கும், சாதாரண பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் போராட்டங்கள் தடை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களை ராஜதுரோகிகளாக கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை
மக்களின் குரலுக்கு செவிசாய்த்து நாடாளுமன்றில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றின் உள்ளேயே ஜனநாயக ரீதியில் தீர்வு எட்டப்பட வேண்டுமென மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.