சஜித், ஜோசப் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு: பொலிஸாருடன் முறுகல் - மெதுவாக அகன்ற அரசியல்வாதிகள்..!
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்தரான ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றுவதற்கு அங்கிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் மருதானையில் இருந்து புறக்கோட்டை நோக்கி நடத்தப்பட்ட பேரணியின் போது மேடையுடனான லொறியொன்றும் பேரணியில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த பேரணி தொழிநுட்பச் சந்திக்கு அருகில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்ட போது மேடையுடனான லொறியில் இருந்த அரசியல்வாதிகளும், பேரணி ஏற்பாட்டுக் குழுவினரும் உரையாற்றுவதற்கு முயற்சித்தனர்.
இவ்வேளையில் ஜோசப் ஸ்டாலின் உரையாற்ற முயன்ற போது, உங்களின் பேச்சை கேட்பதற்கு நாங்கள் வரவில்லை. நாங்கள் எங்கு செல்வதற்காக பேரணியை நடத்துகின்றோமோ அங்கே செல்ல வேண்டும் என கோசம் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸாருடனான முறுகலில் பேரணியில் வந்தவர்கள் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த அரசியல்வாதிகள் அவ்விடத்தில் இருந்து மெதுவாக அகன்று சென்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைளின் கண்ணோட்டம்,