தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற சர்வதேச உதவியை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ள சர்வதேச ரீதியில் உதவிகளை பெற்று தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டுத் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் கோவிட் வைரஸ் பரவல் சம்பந்தமான ஆபத்தான நிலைமை குறித்து தெளிவுப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர், வெளிநாட்டுத் தூதுவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு முக்கியமான சில கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இப்படியான அனர்த்தமான சந்தர்ப்ப்தில் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.