சர்வதேச நாணய பிரதிநிதிகளை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கையின் பொருளாதார மீட்சி முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்தித்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் கீழ் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஒன்றாக மாற்றுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது புதிய பொது ஆணையின் கீழ் ஆட்சி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில், முக்கிய உறுப்பினர்களான ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஹர்சன ராஜகருணா, எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரகுமான், காவிந்த ஜயவர்தன ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பொருளாதார கொள்கை
பேராசிரியர் கென்னடி குணவர்தன மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேரா உட்பட சிரேஸ்ட கல்வியாளர்களும் பங்களிப்புகளை வழங்கினர்.

அவர்கள் பொருளாதார கொள்கை பற்றிய நுண்ணறிவுகளை இந்த சந்திப்பின்போது பகிர்ந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam