எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணையத் திட்டம் ; அமைச்சரவையில் மாற்றம்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையாற்ற உள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கம் அளிக்கவுள்ளார்.
ஜனாதிபதியின் உரையின் போது சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளினதும் முக்கிய உறுப்பினர்கள் முக்கிய அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவிக்கப்படுகின்றது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
