தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க சதித் திட்டம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதித் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சமந்த வித்தியாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு நாட்டை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற அவகாசம் கிடைத்தால், எதிர்க்கட்சியினருக்கு எதிர்காலம் இல்லையென்பதை உணர்ந்து, அவர்களே இப்போது அரசை கவிழ்க்க கும்பலாக சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் இரண்டு விடயங்களுக்காக அரசாங்கத்தின் மீது அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசு நாட்டை எட்டி உயர்த்தும் என்பதை அவர்கள் அறிவார்கள். இந்த அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுத்தால், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும், அதன் பிறகு மக்கள் எதிர்க்கட்சியினரை மீண்டும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் முன்னதாகவே அரசை வீழ்த்தி தடுப்பதே அவர்களின் இலக்கு” என குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் செய்த மோசடி, கொள்ளை, அரசியல் அநியாயங்கள் அனைத்தும் சட்டத்தின் கீழ் வெளிவரும் என்பதை எதிர்க்கட்சியினர் தெரிந்து கொண்டுள்ளனர் இதனால் அரசாங்கத்தின் மீது அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசு சட்டங்களை பலப்படுத்தி, உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், அவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்ல நேரிடும். அதற்காகவே அரசை விரைவில் கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினர் தூய்மையான முறையில் நாட்டை நிர்வகித்திருந்தால், இன்று மக்கள் சுகமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக, அவர்களே செழிப்பாக வாழ, ஏழைகள் இன்னும் துன்புறுகின்றனர்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் இன்றைய துயரங்களை முடிவுக்கு கொண்டு வந்து, ஒரு அழகான மற்றும் செழிப்பான நாட்டை உருவாக்குவதுதான். ஆனால், அதற்குத் தேவையான கால அவகாசத்தை எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
ஒரே இரவில் இதை முடிக்க முடியாது. ஆனால், உறுதியோடு நாங்கள் அதை அடைய முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் சமந்த வித்யாரத்ன இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
