குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அரசு
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்பொழுது துறவிகள் போன்று பேசினாலும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சுனில் ஹந்துனெத்தி
தற்பொழுது இவர்கள் அச்சமடைந்துள்ளனர் எனவும், ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதைன புரிந்து கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாமர சம்பத், தேசபந்து தென்னக்கோன் போன்றவர்கள் சிறைக்குச் செல்லும் போது ஏனையவர்கள் அச்சமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசபந்து, சாமர சம்பத்திற்கு சிறைக்குச் செல்ல நேரிட்டது என்றால் எனக்கு எவ்வளவு பிரச்சினை உள்ளது என்பதை சில பெருந்தலைவர்கள் புரிந்து கொண்டு பீதியடைந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் சில செல்வந்தர்கள் கட்சிகளை அழித்துள்ளதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற பாரிய கட்சிகளை சில வர்த்தகர்கள் அழித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு கட்சிகளுக்குள் புகுந்து கட்சிகளை சீரழித்தவர்கள் குறித்தும் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 16 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
