எதிர்க்கட்சியின் போராட்டத்துக்கு பேருந்துகளை வழங்க அரசாங்கம் இணக்கம்!(வீடியோ)
ஐக்கிய மக்கள் சக்தி மார்ச் 15ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள விவசாயிகளின் மாபெரும் போராட்டம் நடைபெறும்போது கட்டணங்களை செலுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியுமா? என்று எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதான இந்தக் கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, எரிபொருள் விலையுயர்வு காரணமாக தற்போது கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனினும் கட்டணங்களை செலுத்தி போக்குவரத்து சபையின் பேருந்துகளை கோரினால் அதனை தருவதற்கு தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னைய அரசாங்க காலத்தில் தொடருந்து பெட்டிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
