ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் கறுப்பு உடையணிந்து நாடாளுமன்றம் வருகை
22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் நீதித்துறைத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.
இந்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் கடைசி நாள் இன்று (25) ஆகும்.
அதன்படி, இன்று பிற்பகல் குறித்த மசோதா தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
22இற்கு எதிராக போராட்டம்
இரண்டாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இந்த மசோதாவின் மீதான நாடாளுமன்ற விவாதம் நேற்று (24) தொடங்கியது.
இரண்டாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷண நாணயக்காரவினால் விவாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்று பொல்தூவ சந்தியில் 'ஜனநாயகத்தை அழிக்கும் 22க்கு வேண்டாம்' என்ற கருப்பொருளில் போராட்டத்தைத் தொடங்கினர்.
பொல்தூவ சந்தியில் கறுப்பு தலைப்பாகை அணிந்த போராட்டக்காரர்கள் திரண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam