வாகன சாரதிகளுக்கான முக்கிய தகவல்: அறிமுகமாகும் புதிய நடைமுறை
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள இரவு நேர சேவைகளைக் கொண்ட தபால் நிலையங்களில் இரவு நேரங்களில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும், இது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அபராதம் செலுத்தும் வசதிகள்
அதன்படி, சீதாவக்கபுர, கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதி, பொரளை, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பத்தரமுல்ல மற்றும் நுகேகொடை தபால் நிலையங்களில் அபராதம் செலுத்தும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவை, பாணந்துறை மற்றும் களுத்துறை தபால் நிலையங்களிலும் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam