பட்டதாரி அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு
பட்டதாரி அரச ஊழியர்களுக்கான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
உயர்கல்விக்காக தற்போது காணப்படும் பெருமளவிலான ஆசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கு ஏனைய பட்டதாரிகளும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அரச சேவையில் எந்தவொரு பதவியிலும் பணியாற்றும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri