மிருகத்தின் கூண்டு போன்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ள புடினின் எதிர்ப்பாளர்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளர் அலெக்ஸி நாவல்னியை அடைத்திருந்த சிறையின் மாதிரியை பாரீஸ் அரசு காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
அலெக்ஸி நவால்னி முன்னாள் வழக்கறிஞரும் சமூக ஆர்வலரும் ஆவார்.
இவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சியில் நடக்க கூடிய ஊழல் மற்றும் மோசடிகளை கடுமையாக எதிர்த்ததுடன் அவருடைய ஆட்சியில் நடக்கக்கூடிய குற்றங்களை மக்களுக்கு தனது யூடியூப் பக்கத்தின் மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
ஊழல் வழக்கு
இந்த நிலையில் அவர் மீது ஊழல் வழக்குப் போட்டு அந்நாட்டு அரசு சிறையில் அடைத்துள்ளது.
மேலும் நவல்னி மோசடி மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், அவர் கிரெம்ளினுக்கு சவால் விடுத்ததற்கு தண்டனையாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ்,நவல்னியுடன் தொடர்பு கொள்வது கடினம் என்று கூறிய அவர், அவருக்கு மருத்துவச் சிகிச்சை மறுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
நவ்லினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அவரை விஷவாயு மூலம் கொல்ல முயன்ற பிரச்சினையை அடிப்படையாக வைத்து நவ்லினி என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.
இந்த விருது அவரை பற்றி இயக்கிய ஆவணப்படத்திற்கான விருது என்பது அவருக்குத் தெரியுமா என்பது கூட தெரியவில்லை என நவ்லினின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறைக்குள் ஒரு சிறை
பாரிஸில் நவ்லினியை விளாடிமிர் புடின் எவ்வளவு கொடுமையான ஒரு சிறையில் அடைத்து வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் திட்டமிட்டது.
அதன்படி அவரை அடைத்து வைத்திருக்கும் அறையைப் போன்றொரு பிரதியை நவ்லினின் ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை “சிறைக்குள் ஒரு சிறை” என ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்.
கடந்த ஆறு மாத காலங்களில் நவல்னி நூறு நாட்களுக்கு மேலிருந்த இச்சிறையை அவர்கள் மாதிரியாகச் செய்து பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மங்கலான வெளிச்சம் உள்ள பெட்டியின் உள்ளே ஒரு சிறிய கை கழுவுமிடம், தரையில் ஒரு கழிப்பறை, ஒரு ஓரத்தில் எளிமையான படுக்கை, அதையும் பகலில் மடித்து விட்டால் தான் போதுமான இடமிருக்கும்.
நவ்லினின் ஆதரவாளர்கள் அந்த சிறை மாதிரிக்கு வெளியே “நவ்லினி வெளியே,புடின் உள்ளே” என எழுதியிருக்கிறார்கள். இந்த சிறையைப் பார்வையிட்ட பார்வையாளர் ஒருவர் “ இது விலங்கு வாழும் கூண்டு போல் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
