ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக்கணிப்புக்கள் தொடர்பில் எச்சரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிவரும் போலி கருத்துக்கணிப்புக்கள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளுக்கு எதிரானவை
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐரோப்பிய ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிவரும் கருத்துக்கணிப்புகள் தேர்தல் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளுக்கு எதிரானவை.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு அது தேர்தல் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்ளவில்லை, மேலும் பரப்பப்படும் கணிப்புகள் பொய்யானவை என்று கூறியுள்ளது.
மேலும், வாக்களிப்பவர்கள் தவறான தகவல்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும்இ தேர்தல் முடிவுகளை எடுக்கும்போது போலி தகவல்கள் மூலம் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இது ஒரு சந்தைப்படுத்தல் முயற்சியாகும், இவ்வாறான கருத்துக் கணிப்புக்களை மேற்கொள்பவர்கள் இந்த பொது கருத்துக் கணிப்புகளுக்கான மனிதர்களை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதற்கான விவரங்களை வெளியிடுவதில்லை.
இந்த போலி கருத்துக்கணிப்புகளின் நோக்கம் அவர்களது வாக்காளர் அடிப்படையை அதிகரிப்பதாகும். ஒருவர் மேலே வரும்போது மற்றொருவர் கீழே செல்லும்போது அவர்களுக்கு வாக்குகள் அதிகரிக்கும்.
மேலும், தவறான தகவல்களைப் பயன்படுத்தி வாக்காளர்களை தவறாக வழிநடத்துவது முக்கியமான சமூக-அரசியல் விவகாரங்களில் நம் பிக்கையின்மையை வளர்த்து உண்மையை மறைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
இதனால் பொய்யான மற்றும் உண்மையான கருத்துக் கணிப்புகளைப் பிரித்தறிவது கடினமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |