மாநகர முதல்வர் நியமனம் எனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல:ஜீவன் தியாகராஜா
யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக இமானுவேல் ஆனோல் நியமிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் (21.01.2023) வர்த்தமானியொன்று வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் ஜீவன் தியாகராஜா கருத்துரைக்கையில், கடந்த 19ஆம் திகதி யாழ். மாநகர முதல்வர் தெரிவு இடம்பெற இருந்த நிலையில் சபையில் கோரம் இருந்ததாக ஒரு பகுதியினரும், கோரம் இல்லை என பிறிதொரு பகுதியினரும் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் ஊடகங்களில் அவதானித்தேன்.
இலங்கை அரசியல் அமைப்பு
மாநகர சபையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை மாறாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும் உள்ளூராட்சி ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் என்னிடம் உள்ளது.
ஆகவே இலங்கை அரசியல் அமைப்பு மற்றும் மாநகர கட்டளைச் சட்டங்களுக்கு உட்பட்டு முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
