ஒப்ரேசன் துவாரகா! மதிவதனியின் சகோதரி பகீர் தகவல்(Video)
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாராகவை வைத்து சில நகர்வுகளை இந்திய புலனாய்வு துறை மேற்கொண்டிருந்ததான செய்திகள் அண்மைக்காலங்களில் வெளியாகியிருந்தன.
இதில் ஒரு அங்கமாக 2006 - 2009ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வன்னியில் தங்கியிருந்த சுந்தரி எனும் பேராசிரியர், முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னரான ஆண்டுகளில் துவாராகவை நெருங்கி பேச்சுக்களை நடத்துவதற்கான திட்டங்களை இந்திய புலனாய்வு பிரிவு வகுத்திருந்ததாக சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நகர்வுக்கு "ஒப்ரேசன் துவாரகா' என இந்திய புலனாய்வு துறை பெயர் வைத்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சில இராணுவ ஆய்வாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில்தான் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவியின் சகோதரி "தனது சகோதரியும் அவரது மகளும் உயிருடன்தான் இருக்கின்றார்" என்ற புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனினும் மதிவதனியின் சகோதரியின் இந்த காணொளி மீதான தாக்கங்கள் சமூக ஊடகங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்ததோடு, இதன் பின்புலத்தில் உள்ள விடயங்களின் வெளிப்படை தன்மை குறித்தும் பல்வேறான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 13 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan