உலகையே மிரளவைத்த சோவியத் ரஷ்யாவின் பதிலடி (VIDEO)
உலகில் பல மனிதர்கள் இருந்தாலும் சில மனிதர்கள் மட்டுமே வரலாற்றில் நீங்காத இடத்தை பெறுவார்கள் , அப்படி ஒருவர் தான் அடால்ப் ஹிட்லர்(adolf hitler) ஆவார்.
ஹிட்லர் வரலாற்றில் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் உலகில் பேரழிவை ஏற்படுத்திய ஒருவராவார். நாஜி ஜெர்மனியின் தலைவராக, அவர் இரண்டாம் உலகப்போர் மற்றும் ஹோலோகாஸ்ட் இரண்டையும் ஏற்பாடு செய்தவராவார்.
அதாவது சுமார் குறைந்தது 40,000,000 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த நிலையில், இறுதியில் ஹிட்லரின் மரணம் ஏப்ரல் 30, 1945-ல் அவராலேயே தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவது உலகப்போரில் நேச நாட்டுப் படைகளிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது. இதனால் காதலி இவா பிரானுடன் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் என்பது சரித்திரம்.
அத்துடன் இருவரது உடல்களும் எதிரிகளுக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காக அவை உடனடியாக தீயிட்டு எரிக்கப்பட்டன என்றும் வரலாற்று பக்கங்களில் கூறப்படுகின்றது.
1940ஆம் ஆண்டு ஜீலை மாதம் 31ஆம் திகதி ஒரு இராணுவச் சந்திப்பின்போது தனது இந்த விரும்பத்தைத் ஹிட்லர் தெரிவித்தார்.அது ஹிட்லரின் விருப்பம் மாத்திரமல்ல அது ஹிட்லரின் வெறி.
கம்யூனிசத்தின் ஆணி வேரையே பிடுங்கி எறிவேண்டும். சோவியத் என்கின்ற ஒரு தேசம் இருந்ததற்கான அடையாளமே இருகக்கூடாது. முற்றாகவே துடைத்தெரியவேண்டும்.
ஹிட்லரின் தீராத ஆசை இது. சோவியத்தை கபளீகரம் செய்துவிடும் நோக்கத்தில் சோவியத்திற்குள் அனுப்பப்பட்ட ஜேர்மனியப்படையினருக்கு ஒரு விடயத்தைச் செல்லியனுப்பியிருந்தார் ஹிட்லர். வரலாற்றில் இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு பிரமாண்டமான படையெடுப்பு நடைபெறவில்லை என்று உலகம் சொல்லவேண்டும் என்பதே அது.
யுத்தம் என்கின்ற ஒரு விடயத்தை அந்தக் காலகட்டத்தில் சோவியத் ரஷ்யா சிறிதும் விரும்பவில்லை. ஆனால், ஒரு யுத்தம் வாசல்படி தாண்டி வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது? ஒன்று வாழ்வுக்காகப் போராட வேண்டும். அல்லது வாழ்க்கையை இழந்து மரணிக்கவேண்டும்.
வாழ்வா அல்லது சாவா? எனும் தருணத்தில் சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலின் வாழ்வதற்காகப் போராடும் முடிவுக்கு வந்திருந்தார்.
இதுவரை உலகம் கண்டிராததும், இனியும் காணமுடியாததுமான மிகப் பெரிய சண்டைக்களங்களையும், வீர காவியங்களையும் கொண்ட ஜேர்மன் - சோவியத் யுத்தம் பற்றி, மனிதர்களின் பிணத்தை உண்டபடி, சோவியத் வீரர்கள் புரிந்த சண்டைகளின் களங்கள் தொடர்பில் தான் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சிகளில் நாம் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.