கோவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப்பிரிவு திறந்து வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாகப் பல கோடி ரூபாய் செலவில் கோவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவொன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன் இன்று(01) தெரிவித்துள்ளார்.
இச் சிகிச்சைப் பிரிவு ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க அனைத்தும் நடவடிக்கைகளும், வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றன.
இதன்போது பொது வைத்திய நிபுணர்கள், மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி தீவிர சிகிச்சைப் பிரிவு கோவிட் நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து அதி தீவிர சிகிச்சையளிக்கும் பிரிவாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் 6 நோயாளிகளை வைத்து சிகிச்சையளிக்கக் கூடிய விதத்தில் இச்சிகிச்சைப் பிரிவு அமையப் பெற்றுள்ளது.
அத்துடன் நோயாளிக்கு அண்மையிலிருந்து சிகிச்சை வழங்குவதற்கான வைத்திய துறையில் அதிநவீன முறைகளில் ஒன்றான வைரஸ் கிருமிகளுக்கு எதிர்மறை அழுத்தம் கொடுக்கக் கூடியதாக (negative pressure room) இந்த சிகிச்சை கூடம் அமையப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
குறித்த சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்குப் பல கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சிகிச்சை கூடங்கள் இலங்கையில் ஒரு சில மாவட்டங்களிலேயே அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட சிகிச்சைப் பிரிவானது இன்று(01) முதல் உத்தியோகபூர்வமாக இயங்கும் என்பதுடன் எமது பிரதேச மக்களுக்கு இதுவொரு வரப்பிரசாதமாக அமைய உள்ளதாக எனவும் வைத்திய அத்தியட்சகர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளார்.












பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
