மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்காது பாடசாலைகளை திறப்பது ஆபத்தானது
மக்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் அரசாங்கத்தின் முனைப்பு பாராட்டுக்குரியது என ராகம போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் மக்களின் நடமாட்டம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் இது வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் பாராட்டப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த நிலைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கோவிட் தொற்றாளிகள் பதிவாகினாலும் மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தமைக்கு 70 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டமையே ஏதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் வேகமாக தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் அவ்வாறான ஓர் நிலையை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 12 வயதுக்கும் மேற்பட்ட பாடசாலை பிள்ளைகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கியதன் பின்னர் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு முன்னதாக திறந்தால் அது ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை பிள்ளைகளுக்கு இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் வழங்கியதன் பின்னர் பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சுகாதார வழிகாட்டல்களை சரியான முறையில் பின்பற்றினால் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் கோவிட்டை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
